பைக் மீது டிப்பர் லாரி மோதல் வாலிபர் பரிதாப பலி

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே பைக் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக பலியானார். திருத்தணி அடுத்த குப்பம் கண்டிகை, பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் தீபன்குமார் (29). இவர், திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட போளிவாக்கம் சத்திரத்தில் இயங்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், வழக்கம்போல் நேற்று காலை தீபன்குமார், தனது பைக்கில் வீட்டிலிருந்து, அதே பகுதியைச் சேர்ந்த அஜய்குமார், மடத்துகுப்பத்தைச் சேர்ந்த லட்சுமணன் ஆகியோருடன் திருவள்ளூர் நோக்கி சென்றுகொண்டிருந்தார்.

அப்போது, போளிவாக்கம் சத்திரம் பகுதியை கடந்து சென்றபோது, எதிரே அதிவேகமாக வந்த டிப்பர் லாரி, பைக்கின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், பலத்த காயமடைந்த தீபன்குமார் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 2 பேரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். தகவலறிந்ததும், சம்பவ இடத்திற்கு வந்த மணவாளநகர் போலீசார், உயிரிழந்த தீபன்குமாரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பைக் மீது டிப்பர் லாரி மோதல் வாலிபர் பரிதாப பலி appeared first on Dinakaran.

Related Stories: