காரியாபட்டி: காரியாபட்டியில் பால் உற்பத்தியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பால் உற்பத்தியாளர்கள் சார்பாக பசும்பால் லிட்டருக்கு 50 ரூபாய் வழங்க வேண்டும், எருமைப்பால் லிட்டருக்கு 75 ரூபாய் வழங்க வேண்டும், கால்நடைத் தீவனங்கள் மானிய விலையில் வழங்க வேண்டும்,
கூட்டுறவு பால் சொசைட்டி ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவித்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காரியாபட்டி பால், கூட்டுறவு சங்கம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விவசாய சங்க விருதுநகர் மாவட்ட தலைவர் ராம் பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட இணைச் செயலாளர்கள் தங்கம், கண்ணன், கருப்பசாமி, முத்துமாரி, காரியாபட்டி ஒன்றிய தலைவர் துரைப்பாண்டி, செயலாளர் முருகேசபாண்டி, பொருளாளர் செல்வகுமார், சேவுகராஜன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
