திருத்துறைப்பூண்டி, டிச, 30: திருத்துறைப்பூண்டி நகர திமுக சார்பில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதிக கவனம் செலுத்த வேண்டிய 119 மற்றும் 127வது பாகங்களுக்கான பகுதியில் நடைபெற்ற கூட்டத்திற்கு திமுக நகர செயலாளர் ஆர்.எஸ்.பாண்டியன் தலைமை ஏற்றார். கூட்டத்தில் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி திமுக தேர்தல் பார்வையாளர் சௌமியன் வைத்தியநாதன், மாநில இளைஞரணி துணை செயலாளரும்தாட்கோ தலைவருமான இளையராஜா, திமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் முகில் ராஜேந்திரன், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் சிக்கந்தர், மாவட்ட பிரதிநிதிகள் சக்திவேல், ஜாகிர் உசேன், நகர அவை தலைவர் சிதம்பரம், நகர துணை செயலாளர்கள்
செல்லப்பா, ரவி, மாவட்ட சுற்றுசூழல் அணி துணை அமைப்பாளர் ஓம்சக்தி கண்ணன், நகர இளைஞரணி அமைப்பாளர் வசந்த், மற்றும் நகர நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், நகர்மன்ற
உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
திருத்துறைப்பூண்டியில் வெற்றி வாக்குச்சாவடி ஆலோசனைக் கூட்டம்
- வெற்றி
- திரித்துரபுண்டி
- திருமுத்துராப்பூண்டி
- வகுச்சவாடி
- வுகச்சாடி
- திருத்ரபுண்டி
- திமுகா
- ஆர். எஸ் பாண்டியன்
