குளித்தலை, டிச.30: காவிரி பாசன விவசாயத்தை மேம்படுத்த டெல்டா பகுதியில் வேளாண் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என காவிரி டெல்டா பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். காவேரி பாசன டெல்டா பகுதியைச் சார்ந்த கரூர் திருச்சி அல்லது தஞ்சாவூர் மாவட்டத்தில் வேளாண்மை பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு கரூர் மாவட்ட காவிரி படுகை விவசாயிகள் கூட்டமைப்பு தலைவர் திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் முன்னாள் முதல்வரும், கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக மண் மற்றும் பயிர் மேலாண்மை மைய இயக்குனர் மான வளையப்பட்டி டாக்டர் ஜெயராமன் கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.
அதில் குறிப்பிட்டுள்ளதாவது. நமது நாட்டில் அரசு சார்ந்த செயல்பாட்டில் உள்ள வேளாண்மை பல்கலைக்கழகங்கள் மட்டுமே வேளாண்மை சார்ந்த கல்வி ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கம் ஆகிய மூன்று பிரதான பணிகளை மேற்கொள்கின்றன. ஒவ்வொரு இடம் சார்ந்த உயர்தர வேளாண்மை சார்ந்த கல்வி ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கம் பணிகள் தொடர்ந்து நடைபெற்றால் மட்டுமே நீண்ட காலம் நிலைத்த வேளாண்மை வளர்ச்சி இருக்கும். தமிழ்நாட்டில் வேளாண்மை சார்ந்த பட்டப் படிப்புகள் படிக்க ஆண்டுதோறும் சுமார் 52 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பிக்கின்றனர் ஆனால் 4550 மாணவர்கள் மட்டும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் சார்ந்த 14 கல்லூரிகளிலும் தனியார் துறையைச் சார்ந்த 28 கல்லூரிகளிலும் சேர்க்கப்படுகின்றனர்.
தமிழக மாணவர்களின் தேவைகளுக்கு ஏற்படவும் மண்டலவாதியாக வேளாண்மை சார்ந்த கல்வி ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கம் ஆகிய பணிகள் வளர்ச்சி பெற உத்தரப் பிரதேசம் கர்நாடகம் ராஜஸ்தான் மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலத்தில் உள்ளது போன்று கூடுதலாக வேளாண்மை பல்கலைக்கழகங்கள் அமைக்கப்பட வேண்டும். இந்நிலையில் கூடுதலாக தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் எனப்படும் காவிரி பாசன பகுதியில் ஒரு வேளாண் பல்கலைக்கழகம் அமைப்பது மிகவும் அவசியமாகும்.
கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் சார்ந்த 14 கல்லூரிகளுக்கும் 32 ஆராய்ச்சி நிலையங்களுக்கும் 14 வேளாண்மை அறிவியல் பயிற்சி மையங்களுக்கு சேர்த்து தமிழ்நாடு அரசு இந்திய அரசு அயல்நாடுகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் நிதி உதவி சுமார் ரு 600 கோடி தொகையினை தற்போது புதிதாக பரிந்துரைக்கப்படும் வேளாண்மை பல்கலைக்கழகங்கள் கட்டுப்பாட்டில் வரும். வேளாண்மை தோட்டக்கலை சார்ந்த கல்லூரிகள் ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கம் நிலையங்களுக்கு உரிய வகைகளில் இரண்டாகப் பிரித்து வழங்க முடியும் இதனால் புதிய வேளாண்மை பல்கலைக்கழகம்அமைப்பது என அறிவிக்க தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை மனு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
3 பயனாளிகளுக்கு ரூ.3825 மதிப்பிலான காதொலி கருவிகளையும், 1 பயனாளிக்கு ரூ.1996 மதிப்பிலான பிரைலி கைக்கடிகாரத்தினையும், 1 பயனாளிக்கு தொழில் தொடங்க மானிய வங்கிக் கடன் ரூ.25 ஆயிரத்திற்கான காசோலை என மொத்தம் 5 பயனாளிகளுக்கு ரூ.38,471 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்.
