மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் பரமபதநாதன் சேவையில் பெருமாள் எழுந்தருளல்

மன்னார்குடி, டிச. 30: மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து 10ம்நாள் விழாவை முன்னிட்டு பெருமாள் பரமபத நாதன் சேவையில் எழுந்தருளி அருள்பாலித்தார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள பிரசித்தி பெற்ற வைணவத் தலமான ராஜகோபால சுவாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா நடைபெற்று வருகிறது. இதில், முக்கிய விழாவான பரமபத வாசல் திறப்பு இன்று அதிகாலை நடை பெற்றது.

இந்த நிலையில், வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் ஒரு பகுதியான பகல் பத்து 10ம் நாள் திருவிழாவான நேற்று பெருமாள் பாமா, ருக்மணி சமேதரராக பரமபத நாதன் சேவையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் கருடர் இளவரசன், செயல் அலுவலர் மாதவன் ஆகியோர் தலைமையில் உபயதாரர்கள், தீட்சிதர்கள் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Related Stories: