ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை,டிச.30: புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு, அரசு ஊழியர் சங்கமான ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அரசு கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் இல்லையென்றால் வரும் 6ம் தேதி முதல் அனைவரும் ஒன்றிணைந்து தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் எச்சரிக்கை விடுத்து முழக்கங்களை எழுப்பினர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: