நுகர்பொருள் வாணிபக்கழக பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை

தஞ்சாவூர், டிச 30: பருவகால பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி தஞ்சை மாவட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக பருவ கால பணியாளர்கள் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியதாவது: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் நிரந்தர பட்டியல் எழுத்தர், அனுகை உதவியாளர் காலி பணியிடங்களை நிரப்பிட அனைத்து மண்டலங்களிலும், 2013ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை பணி நியமனம் செய்யப்பட்டுள்ள பருவகால பணியாளர்களின் முன்மொழிவுகள் தலைமை அலுவலத்திலிருந்து கோரப்பட்டு அணைத்து மண்டலங்களிலிருந்தும், தலைமை அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில் பருவகால பணியாளர்களாகிய எங்களை காலி பணியிடங்களில் பணி நிரந்தரம் செய்வதற்கு அவ்வப்போது தலைமை அலுவலகத்திலிருந்து நிலுவையில்லாச்சான்று கோருவதும், பின்பும் கிடப்பில் போடுவதும் வழக்கமாக இருந்து வருகிறது. பருவகால பணியாளர்களாகிய நாங்கள் பெரும்பாலும் 50 வயதினை கடந்த நிலையில் எங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டு மன வேதனைக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளோம். எனவே, எங்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் பருவகால பணியாளர்களாகிய எங்களை பணி நிரந்தரம் செய்து எங்களது குடும்பத்திற்கு விடியலை ஏற்படுத்தி தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: