பாடாலூர், டிச. 30: மார்கழி மாதம் ஆன்மீகத்திற்கு உகந்த மாதமாகும். அனைத்து கோயில்களிலும் அதிகாலையில் பக்தர்கள் சென்று தரிசனம் செய்வது வழக்கம். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா நாட்டார்மங்கலம் கிராமத்தில் வரதராஜ கம்ப பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டு தோறும் மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெருமாள் வீதி உலா நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, இந்த ஆண்டிற்கான மார்கழி வீதி உலா இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதையொட்டி வரதராஜ கம்ப பெருமாள் கோயிலில் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடக்கிறது. இரவு 10 மணியளவில் சுவாமி வீதி உலா நடைபெறுகிறது.
