பெரம்பலூர், டிச. 30: பாலின சமத்துவத்திற்கான தேசிய அளவிலான பிரச்சாரம் குறித்து, பெரம்பலூர் பாலின வள மையத்தில் மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்களுக்கான மாவட்டஅளவிலான போட்டிகள் நடைபெற்றன. 128 பேர் பங்கேற்பு. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம் மூலம், பாலின சமத்துவத்திற்கான தேசிய அளவிலான பிரச்சாரம் குறித்து, பெரம்பலூர் வட்டார பாலின வள மையத்தில் கோலப் போட்டி, கட்டுரை போட்டி, பேச்சுப்போட்டி, ஓவிய போட்டி மற்றும் நாடகப் போட்டிகள் மாவட்ட அளவில் நடத்தப்பட்டது. போட்டிகளை உதவி திட்ட அலுவலர் பெர்லினா தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் ஊராட்சியில் வெற்றி பெற்று, வட்டார அளவில் வெற்றி பெற்று நேற்று மாவட்டஅளவிலான போட்டியில் கலந்து கொண்டனர். இந்த போட்டிகளில் பெரம்பலூர், வேப்பந்தட்டை, ஆலத்தூர், வேப்பூர் ஆகிய நான்கு வட்டாரங்ககளில் உள்ள வட்டார இயக்க மேலாளர்களான சுதா, மணி வண்ணன், அமுதா ஆகியோர்களும், பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் சுய உதவி குழு உறுப்பினர்கள் 128 நபர்கள் கலந்து கொண்டனர்.
