இந்தியாவின் முயற்சி தோல்வி பாக். தீவிரவாதியை காப்பாற்றிய சீனா: 4 மாதத்தில் 3ம் முறை அடாவடி

நியூயார்க்: பாகிஸ்தானின் தீவிரவாத செயல்களுக்கு சமீப காலமாக சீனா ஆதரவாக செயல்பட்டு வருகிறது. இந்தியா, அமெரிக்காவுக்கு போட்டியாக இதை அது செய்கிறது. பல்வேறு தீவிரவாத தாக்குதலில் தொடர்புடைய பாகிஸ்தான் தீவிரவாதிகளை சர்வதேச தடை பட்டியலில் சேர்க்கும் இந்தியா, அமெரிக்காவின் முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறது. கடந்த 2008ம் ஆண்டு நடந்த மும்பை தாக்குதலின் மூளையாக, பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி சஜித் மிர் செயல்பட்டான்.

இவனை சர்வதேச தீவிரவாதியாக அறிவித்து, கறுப்பு பட்டியலில் சேர்க்க ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா ஆதரவுடன் அமெரிக்கா நேற்றுமுன்தினம் தீர்மானம் கொண்டு வந்தது. ஆனால், சீனா இதை தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தடுத்தது. கடந்த 4 மாதத்தில் 3வது முறையாக பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக சீனா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: