அமேசானில் மேலும் 16 ஆயிரம் பேர் பணி நீக்கம்

நியூயார்க்: அமேசான் நிறுவனம் கொரோனா காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட அதிகப்படியான பணியாளர் சேர்க்கையை சரிசெய்து தற்போது வளர்ந்து வரும் ஏஐ தொழில்நுட்பத்துறைகளில் அதிக முதலீடு செய்வதற்கு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் கடந்த அக்டோபரில் 14ஆயிரம் ஊழியர்களை அமேசான் பணிநீக்கம் செய்தது. இதனை தொடர்ந்து மூன்று மாதத்தில் இரண்டாவது கட்டமாக நேற்று சுமார் 16 ஆயிரம் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவதாக அமேசான் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அமேசானின் மூத்த துணைத் தலைவர் பெத் கலெட்டி தனது சமூக வலைதள பதிவில், ‘‘அமேசான் பதவிகளை குறைத்து பொறுப்புணர்வை அதிகரித்து அதிகாரத்துவத்தை அகற்றி வருகின்றது. தற்போதைய பணி நீக்கம் அக்டோபரில் நடந்த முதல் சுற்று பணிநீக்கத்தை தொடர்ந்து வருகின்றது. அப்போது 14ஆயிரம் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். சில பிரிவுகள் அந்த நிறுவன மாற்றங்களை அக்டோபரிலேயே முடித்துவிட்டாலும் மற்றவை இப்போது வரை முடிக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: