இஸ்லாமாபாத்: ஊழல் மற்றும் அரசு ரகசியங்களை கசியவிட்டது தொடர்பான வழக்குகளில் தண்டனை பெற்றுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 73 வயதான இம்ரான் கான் 2023 முதல் சிறையில் இருக்கிறார். இந்த நிலையில் இம்ரானுக்கு சிறிய கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் தகவல் தொடர்பு அமைச்சர் அதாவுல்லா தரார் கூறுகையில், அடியாலா சிறையில் கண் மருத்துவர்கள் இம்ரான் கானை பரிசோதித்தனர். மேலும் மதிப்பீடு மற்றும் சிகிச்சைக்காக அவரை மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர். அவரது ஒப்புதலைப் பெற்ற பிறகு, மருத்துவர்கள் சிறிய அறுவை சிகிச்சை மேற்கொண்டனர் என்றார்.
