தமிழகத்தில் இருந்து கடத்தப்பட்ட 3 பழங்கால வெண்கல சிலைகளை இந்தியாவிடம் ஒப்படைக்கிறது அமெரிக்கா

நியூயார்க்: தமிழகத்தில் இருந்து கடத்தப்பட்ட மிகவும் பழமையான 3 சோழர் கால வெண்கல சிலைகள் இந்தியாவிடம் திரும்ப ஒப்படைக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. தமிழ்நாட்டில் சோழர், விஜயநகர ஆட்சி காலத்தை சேர்ந்த சுவாமி சிலைகள் வாஷிங்டன்னில் உள்ள ஸ்மித்சோனியன் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோமாஸ்கந்தர், 16 ம் நூற்றாண்டைச் சேர்ந்த பரவையுடன் கூடிய சுந்தரர் சிலை, கி.பி. 990 ம் ஆண்டைச் சேர்ந்த சிவ நடராஜர் சிலை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.

இவை மூன்றும் புனிதமான இந்து சிலைகள் ஆகும். சட்டவிரோதமாக கடத்தி செல்லப்பட்ட 3 சிலைகளை ஒப்படைக்குமாறு அமெரிக்காவிடம் இந்தியா கோரிக்கை விடுத்து வந்தது. இந்த நிலையில் இந்த மூன்று சுவாமி சிலைகளும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் என்று ஸ்மித்சோனியன் அருங்காட்சியகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு ஆவண காப்பகத்தில் நடத்தப்பட்ட ஆய்வின் படி இந்த சிலைகள் கடந்த 1956 முதல் 1959 வரை உள்ள காலக்கட்டத்தில் தமிழகத்தில் உள்ள கோயில்களில் இருப்பது புகைப்பட ஆதாரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

Related Stories: