ஐநா: காசா மோதலை முடிவுக்கு கொண்டுவருவதற்கான அமெரிக்கா முயற்சிக்கு இந்தியா பாராட்டு தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கின் நிலைமை குறித்த ஐநா. பாதுகாப்பு கவுன்சிலின் திறந்த விவாதத்தில் ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி தூதர் பர்வதனேனி ஹரிஷ் நேற்று முன்தினம் பேசியதாவது: காசா மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஐநா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் 2803 ஐ செயல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள சமீபத்திய முன்னேற்றத்தை இந்தியா கவனத்தில் கொள்கிறது. நீண்டகால பிரச்னையை நிவர்த்தி செய்வதில் அமெரிக்காவிற்கு இந்தியா பாராட்டு தெரிவிக்கிறது.
அதே நேரத்தில், பயங்கரவாதத்திற்கு நாகரீக சமூகங்களில் இடமில்லை . காசாவில் மனிதாபிமான சூழ்நிலையில் படிப்படியாக முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ள நிலையில்,உணவு , எரிபொருள் பற்றாக்குறை மற்றும் சுகாதார பிரச்னைகள், சமூகத்தின் அனைத்து பிரிவுகளையும், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதிக்கிறது. எனவே பாதுகாப்பான மனிதாபிமான அணுகலை ஏற்படுத்த வேண்டும். பாலஸ்தீன மக்கள் சாதாரண வாழ்க்கையை நடத்த வேண்டும் என்ற ஏக்கத்தை உறுப்பு நாடுகள் ஆதரிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
