வெனிசுலாவில் எண்ணெய் வர்த்தகத்தில் தனியார் பங்களிப்பு இடைக்கால அதிபர் ஒப்புதல்

கராகஸ்: அமெரிக்காவிற்குள் போதைப் பொருட்கள் கடத்தல் மற்றும் போதை சார்ந்த தீவிரவாத செயல்களை அமெரிக்காவில் நிகழ்த்த திட்டம் தீட்டியதாக கூறி வெனிசுலாவின் அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை அமெரிக்கா கைது செய்தது. இதனைத் தொடர்ந்து நாட்டின் இடைக்கால அதிபராக டெல்சி எலோய்னா ரோட்ரிக்ஸ் பதவியேற்றார். இந்நிலையில் எண்ணெய் வர்த்தகத் துறையில் புதிய சட்டத் திருத்தத்துக்கு அவர் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த சட்டத்திருத்தத்தின் மூலம் வெனிசுலாவில் எண்ணெய் துறையில் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்படும்.

Related Stories: