டெக்சாஸ் மாகாணத்தில் எச்-1 பி விசா நிறுத்தம்

வாஷிங்டன்: எச்- 1 பி விசா என்பது அமெரிக்காவின் தற்காலிக குடியுரிமை போன்றதாகும். வெளிநாடுகளில் உள்ள திறமையான பணியாளர்களை அமெரிக்காவுக்கு வரவழைத்து வேலை வாங்க இந்த விசா முறை அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த 1990 முதல் இந்த விசா முறை நடைமுறையில் இருக்கிறது. எச்-1 பி விசாவுக்கு ஆண்டுக்கு ரூ.85 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டும் என்று கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார்.

சட்டவிரோத குடியேற்றத்தை தடுத்திட இந்த திட்டத்தை டிரம்ப் அறிமுகப்படுத்தி உள்ளார். இந்த நிலையில் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கான எச்-1 பி விசா மனுக்களை உடனடியாக நிறுத்த அந்த மாகாண ஆளுநர் கிரேக் அபோட் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு வரும் 2027 மே மாதம் வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டெக்சாஸ் மாகாண அரசின் இந்த உத்தரவு இந்தியர்கள் உள்பட வெளிநாட்டினரை கடுமையாக பாதிக்கும்.

Related Stories: