பாகிஸ்தானில் 52 தலிபான் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

லாகூர்: பாகிஸ்தானின் பாதுகாப்புப் படைகள் கடந்த 24 மணி நேரத்தில் 3 மாகாணங்களில் தனித்தனி நடவடிக்கைகளில் தலிபான் அமைப்பைச் சேர்ந்த 52 பயங்கரவாதிகளைக் கொன்றனர். பாகிஸ்தான் பயங்கரவாத எதிர்ப்பு படை, ராணுவம் இணைந்து தலிபான் பயங்கரவாத அமைப்பான தெஹ்ரீக் இ தலிபான் பாகிஸ்தான் படையினரை குறிவைத்து அதிரடி வேட்டை நடத்தினர். இதில் பஞ்சாப் மாகாணத்தில் 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பலுசிஸ்தானில் இரண்டு தனித்தனி நடவடிக்கைகளில் 41 பேரும், கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் ஒரு தளபதி உட்பட தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) அமைப்பைச் சேர்ந்த 5பேரும் கொல்லப்பட்டனர்.

Related Stories: