இஸ்ரேல் தூதர் நாட்டை விட்டு வெளியேற தென்னாப்பிரிக்கா அரசு அதிரடி உத்தரவு: ராஜதந்திர விதிகளை மீறிய குற்றச்சாட்டு

கேப்டவுன்: அதிபரை அவமானப்படுத்தும் விதமாக கருத்துக்களை பதிவிட்ட இஸ்ரேலின் துணை தூதர் நாட்டில் இருந்து வெளியேறும்படி தென்னாப்பிரிக்கா உத்தரவிட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கான இஸ்ரேல் துணை தூதர் ஏரியல் சீட்மேன். இவர் தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோஸாவை அவமானப்படுத்தும் விதமாக சமூகவலைதளத்தில் கருத்துக்களை பதிவிட்டு வந்துள்ளார். மேலும்,இஸ்ரேலிய அதிகாரிகளை அனுமதியின்றி தென்னாப்பிரிக்காவிற்கு அழைத்து வந்ததாகவும் அவர் மீது புகார்கள் வந்தன.

இந்த நிலையில் ராஜதந்திர விதிகளை மீறியதாக ஏரியல் சீட்மேனுக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனால் சீட்மேன் நாட்டை விட்டு வெளியேறும்படி தென்னாப்பிரிக்க அரசு நேற்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. காசாவில் இஸ்ரேல் இன படுகொலை செய்ததாக சர்வதேச நீதிமன்றத்தில் தென்னாப்பிரிக்கா குற்றம் சாட்டியது. இந்த விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே உறவில் விரிசல் ஏற்பட்டது. கடந்த 2023ல் தென்னாப்பிரிக்காவில் இருந்த தனது தூதரை இஸ்ரேல் திரும்ப பெற்றது. அதன் பின் சீட்மேன் அங்கு மூத்த தூதரக அதிகாரியாக இருந்தார்.

Related Stories: