இந்தியா – ஐரோப்பிய யூனியன் ஒப்பந்தம் அமெரிக்கா கடும் எதிர்ப்பு

வாஷிங்டன்: இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுபற்றி அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசன்ட்,’அவர்கள் அவர்களுக்கு எது சிறந்ததோ அதைச் செய்ய வேண்டும். ஆனால், ஐரோப்பியர்களை ஏமாற்றம் அளிப்பவர்களாக நான் காண்கிறேன். இந்தியா தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்கிறது. அதை சுத்திகரித்து ஐரோப்பிய ஒன்றியத்துக்கு விற்கிறது. இதற்காகத்தான் அமெரிக்கா, இந்தியாவுக்கு எதிராக 25% இறக்குமதியை விதித்தது. ஆனால், உக்ரைனுக்கு ஆதரவாக இருக்கும் ஐரோப்பிய யூனியன், இவ்விஷயத்தில் அமெரிக்காவுடன் இணையவில்லை. இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை செய்ய விரும்பியதுதான் இதற்குக் காரணம் என்பது இப்போது தெரிகிறது. ஒரு ஐரோப்பியர் உக்ரைன் மக்கள் குறித்துப் பேசும்போதெல்லாம், அவர்கள் உக்ரைன் மக்களைவிட வர்த்தகத்துக்கே முன்னுரிமை அளிக்கிறார்கள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

Related Stories: