ஐயப்பன் வழிபாட்டில் வேட்டைத் திருவிழா

ஐயப்பன் தவயோகியாக ஞான குருவாக இருந்தாலும், அவர் அன்பர்களின் பாதுகாப்பாக வேட்டையையும் மேற்கொண்டுள்ளார். அதை நினைவூட்டும் வகையில் பேட்டைதுள்ளல் என்னும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. முகத்தில் கரியையும், வண்ணப் பொடிகளையும் பூசிக்கொண்டு காய்கறிகளை தூளித்தொட்டிலில் கட்டி துள்ளி ஆடி வரும் பேட்டைத் துள்ளல், ஐயப்பன் தரிசன யாத்திரையில் முதன்மையான இடம் பெறுகிறது.

இலங்கையில் உள்ள ஐயப்பன் ஆலயங்களில் ஒன்று காரைத்தீவில் அமைந்துள்ள வியாவில் ஐயப்பன் ஆலயமாகும். இங்கு நடைபெறும் ஐயப்பன் விழாவில், வேட்டைத் திருவிழா நடைபெறுகிறது. இதில் மான், பன்றி, பறவைகள் ஆகிய மூன்றை வேட்டையாடுவதாக உருவகமாக கூறப்படுகிறது.

தத்துவ நோக்கில் மான்கள் ஆணவ மலத்தையும், பன்றிகள் கன்ம மலத்தையும், பறவைகள் மாய மலத்தையும் குறிப்பதாகக் கூறுகின்றனர். இவைகளை வேட்டையாடுவதன் மூலம் பெருமான், மும்மலங்களை நீக்கி உயிர்களுக்குப் பேரின்பம் அருளுகிறான் என்பதை உணர்த்துவதாகக்

கூறுகின்றனர்.

தொகுப்பு - அருள் ஜோதி

Related Stories: