ராம் இயக்கத்தில் சிவா

 ராம் இயக்கத்தில் சிவா ஹீரோவாக நடிக்க உள்ளார். கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி, பேரன்பு படங்களை இயக்கியவர் ராம். அடுத்ததாக நிவின் பாலி, அஞ்சலி, சூரி நடிப்பில் ஏழு கடல் ஏழு மலை படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை 28, தமிழ் படம், கலகலப்பு உள்ளிட்ட படங்களில் நடித்த சிவா நடிக்கும் படத்தை ராம் இயக்க உள்ளார்.

இதுவரை காமெடி கலந்த வேடங்களிலேயே நடித்து வந்த சிவா, அதிலிருந்து மாறுபட்டு இந்த படத்தில் நடிக்கிறார். இது ஒரு ஃபீல் குட் படமாக இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது. பிப்ரவரி 6ம் தேதி முதல் இதன் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. கோவையில் முதல் கட்ட படப்பிடிப்பு நடக்க உள்ளது. இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். மற்ற நடிகர், நடிகைகளுக்கான தேர்வு நடைபெற்று வருகிறது. படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: