விஜய் கார்த்திகேயா இயக்கத்தில் கிச்சா சுதீப், ேராஷிணி பிரகாஷ், தீப்ஷிகா நடித்துள்ள படம், ‘மார்க்’. கன்னடம் மற்றும் தமிழில் உருவாகியுள்ள இப்படத்தின் கன்னட பதிப்பு, நேற்று முன்தினம் கர்நாடகாவில் வெளியாகியுள்ளது. இப்படம் ஒட்டுமொத்த ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றுள்ளது. கிச்சா சுதீப் இதுவரையில் நடித்த படங்களுக்கு இல்லாத அளவுக்கு ஓப்பனிங் கிடைத்துள்ளதாகவும், பார்வையாளர்களின் பாசிட்டிவ் விமர்சனங்களும், வரவேற்பும் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், ‘மார்க்’ படத்தின் தமிழ் பதிப்பை வரும் 2026 ஜனவரி 1ம் தேதி சத்யஜோதி பிலிம்ஸ் டி.ஜி.தியாகராஜன் தமிழ்நாட்டில் வெளியிடுகிறார்.
