ஏ.ஆர்.ரஹ்மானின் ‘மூன்வாக் மினி கேசட்’

பிஹைண்ட்வுட்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் ‘மூன்வாக்’ என்ற படத்தின் மினி கேசட் யூடியூப்பில் வெளியானது. ஐந்து பாடல்களை ஏ.ஆர்.ரஹ்மான் பாடியுள்ளார். அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் பல்வேறு மொழிகளில் படம் திரைக்கு வருகிறது. யூயுயூப்பில் ஒரே வீடியோவாக, ஆல்பத்திலுள்ள 5 பாடல்களையும், தலா 1 நிமிட பீட்ஸாக இணைத்து தரப்பட்டுள்ளது. மனோஜ் நிர்மலா தரன் இயக்கியுள்ளார்.

29 வருடங்களுக்கு பிறகு ஏ.ஆர்.ரஹ்மான், பிரபுதேவா கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால், ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. முழுநீள காமெடி மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படமான இதில் இசைக்கும், பாடல்களுக்கும், நடனத்துக்கும் அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. இசை வெளியீட்டு விழா, வரும் ஜனவரி 4ம் தேதி சென்னையில் நடக்கிறது.

Related Stories: