சென்னை: கன்னட ஸ்பை திரில்லராக உருவாகியுள்ள படம், ’666 ஆபரேஷன் ட்ரீம் தியேட்டர்’. ஹேமந்த் எம்.ராவ் இயக்கும் இதில் சிவராஜ்குமார், டாலி தனஞ்செயா ஆகியோருடன் பிரியங்கா மோகன் நடித்துள்ளார். கடந்த 2019ல் கன்னடத்தில் வெளியான ‘ஓந்த் கதே ஹெல்லா’ என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான அவர், பிறகு தமிழ் மற்றும் தெலுங்கில் சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், ரவி மோகன், பவன் கல்யாண், நானி ஆகியோருடன் நடித்தார்.
இந்நிலையில், 6 வருட இடைவெளிக்கு பிறகு பிரியங்கா மோகன் நடித்துள்ள கன்னட படம், ‘666 ஆபரேஷன் ட்ரீம் தியேட்டர்’. இதில் அவரது பர்ஸ்ட் லுக் நேற்று வெளியிடப்பட்டது. இந்த நிலையில், தமிழில் கவின் நடிக்கும் படத்திலும், ‘மேட் இன் கொரியா’ என்ற படத்திலும் பிரியங்கா மோகன் நடித்து வருகிறார்.
