75 வயது மூதாட்டியாக ராதிகா நடிக்கும் தாய் கிழவி

சென்னை: தரமான கதைகளை தேர்வு செய்து, திறமையானவருக்கு வாய்ப்பு வழங்கும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள படம், ‘தாய் கிழவி’. முதன்மை கதாபாத்திரத்தில் ராதிகா நடித்துள்ளார். படம் குறித்து இயக்குனர் சிவகுமார் முருகேசன் கூறியதாவது: உசிலம்பட்டி கிராமத்திலுள்ள காடுபட்டியில் வசிக்கும் மூதாட்டி மற்றும் அவரது குடும்பத்தினரை பற்றிய கதையாகவும், அங்குள்ள வாழ்க்கை பற்றி பேசும் படமாகவும் இருக்கும்.

75 வயதுள்ள மூதாட்டி பவுனுத்தாயி கேரக்டரில் ராதிகா, அவரது மகன்களாக சிங்கம்புலி, அருள்தாஸ், பாலசரவணன், மகளாக ரேய்ச்சல் ரெபேகா, மருமகனாக முத்துக்குமார் நடித்துள்ளனர். தவிர முனீஷ்காந்த், இளவரசு, ஜார்ஜ் நடித்துள்ளனர். விவேக் விஜயராஜ் ஒளிப்பதிவு செய்ய, நிவாஸ் கே.பிரசன்னா இசை அமைத்துள்ளார். சான் லோகேஷ் எடிட்டிங் செய்ய, ராமு தங்கராஜ் அரங்கம் அமைத்துள்ளார்.

Related Stories: