நடிகை ஸ்ரீதேவிக்கு சுவிட்சர்லாந்தில் சிலை

1970, 80களில் ரஜினி, கமலுடன் பல்வேறு படங்களில் நடித்து ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. பின்னர் இந்தி படங்களுக்கு சென்று நம்பர் ஒன் இடத்தை பிடித்தார். தயாரிப்பாளர் போனி கபூரை மணந்து இல்லறத்தில் செட்டிலானவருக்கு குஷி, ஜான்வி என 2 மகள்கள் பிறந்தனர். கடந்த ஆண்டு உறவினர் திருமண விழாவில் பங்கேற்க துபாய் சென்ற ஸ்ரீதேவி அங்கு குளியல் அறையில் உள்ள பாத் டப்பில் விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்தார்.

Advertising
Advertising

சர்வதேச அளவில் பிரபலமான ஸ்ரீதேவிக்கு லண்டனில் சிலை வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீதேவி நடித்த ‘சாந்தினி’ என்ற இந்தி படம் முழுக்க சுவிட்சர்லாந்தில் உள்ள பல்வேறு இடங்களில் படமாக்கப்பட்டது. இப்படத்தை தயாரித்த யஷ் சோப்ரா தயாரித்த மேலும் பல இந்தி படங்கள் சுவிட்சர்லாந்தில் படமாக்கப்பட்டது. இதனால் இந்தியாவிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் சுவிட்சர்லாந்துக்கு சென்றனர்.

சுவிட்சர்லாந்து சிறந்த சுற்றுலா தலம் என்பதை தனது படங்கள் மூலம் உணர்த்தியதால் யஷ் சோப்ராவுக்கு கடந்த 2016ம் ஆண்டு அந்நாட்டில் சிலை வைக்கப்பட்டது. அந்த வரிசையில் ஸ்ரீதேவியின் ‘சாந்தினி’ படமும் சூப்பர் ஹிட்டாகி சுவிட்சர்லாந்துக்கு மேலும் பல்லாயிரக் கணக்கான சுற்றுலா பயணிகளை ஈர்த்து தருவதாக அமைந்ததையடுத்து, ஸ்ரீதேவியை கவுரவிக்கும் வகையில் அவருக்கும் அந்நாட்டில் சிலை வைக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.