சென்னை: காபி (Kaapi) புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், தாமஸ் செபாஸ்டியன் இயக்கத்தில் உருவாகியுள்ளது ‘அம் ஆ’. திலீப் போத்தன் மற்றும் தேவதர்ஷினி நடிப்பில், மனதை இலகுவாக்கும், அன்பைப் பேசும் படைப்பாக உருவாகியுள்ள மலையாள படம் இது. இப்படத்தின் தமிழ்ப் பதிப்பு வரும் ஏப்ரல் 18ம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் திரையரங்கு வெளியீட்டை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் படப்போஸ்டரை, விஜய் சேதிபதி தனது சமூக வலைத்த்தள பக்கத்தில் வெளியிட்டார். மேலும் படம் வெற்றி பெற படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். மலையாளத்தில் வெளிவந்து பெரும் பாராட்டுக்களைக் குவித்துள்ள இப்படம், திரையரங்குகளில் 60 நாட்களை வெற்றிகரமாக கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. விமர்சகர்கர்கள் மற்றும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம் இப்போது தமிழில் வரவுள்ளது.