மும்பை: பாலிவுட் பாடகர் மிக்கா சிங், விஜய்யுடன் சச்சின் படத்தில் நடித்த பிபாஷா பாசுவை வைத்து ‘டேஞ்சர்ஸ்’ என்ற இந்தி படத்தை தயாரித்தார். இந்த படத்துக்கு ரூ.4 கோடி பட்ஜெட் நிர்ணயிக்கப்பட்டதாம். ஆனால் பிபாஷா பாசுவால் படத்தின் பட்ஜெட் ரூ.14 கோடியாக உயர்ந்துவிட்டது என மிக்கா சிங் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து மிக்கா சிங் கூறுகையில், ‘இந்த படத்துக்கு லண்டனில் சில காட்சிகளை படமாக்கினோம். அப்போது பிபாஷா பாசு, எதிர்பாராத வகையில் பல செலவுகளை வைத்துவிட்டார்.
படப்பிடிப்புக்கு வந்தவர்களுக்கு நாம் ஒரு ஓட்டலை புக் ெசய்தோம். ஆனால் குறிப்பிட்ட ஓட்டலில்தான் தங்குவேன் என பிபாஷா அடம் பிடித்தார். அவரால்தான் செலவுகள் கூடியது. பட்ஜெட் அதிகரித்தது. இதனால் சிறு பட்ஜெட் படம், பெரிய பட்ஜெட்டாக மாறி எனக்கு பெரும் நஷ்டத்தை கொடுத்தது’ என்றார். இது பற்றி பிபாஷா பாசு, தனது இன்ஸ்டா பதிவில், ‘நச்சுத்தன்மை கொண்டவர்கள், எதிர்மறையாளர்களிடமிருந்து விலகி இருங்கள். கடவுள் அனைவரையும் ஆசிர்வதிக்கட்டும். துர்கா… துர்கா…’ என தெரிவித்துள்ளார்.
