சயின்ஸ் ஃபிக்‌ஷன் திரில்லர் தி ஸ்டிங்கர்

சென்னை: வீ.ஆர். சினி கிரியேஷன்ஸ் சார்பில் டாக்டர் அருண் பிரசாத் தயாரிப்பில் விரைவில் படப்பிடிப்பு தொடங்க விருக்கும் சயின்ஸ் ஃபிக்ஷன் திரில்லர் திரைப்படம் ‘தி ஸ்டிங்கர்’. பி.ஹரி எழுதி இயக்கும் இந்த படத்தில் சாக்‌ஷி அகர்வால், அருண் பிரசாத், னிவாசன், தீபிகா, ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, பிரபல நடிகை கதையின் நாயகியாக நடிக்க இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் கண்டிராத வகையில், உலக தரம் வாய்ந்த தொழில் நுட்பத்துடன் விஎஃப்எக்ஸ் பணிகளை பீனிக்ஸ் ஃபிலிம் மேக்கர் ஸ்டுடியோ மும்பையை சேர்ந்த அனுபவமிக்க கலைஞர்களை கொண்டு உருவாக்க உள்ளது என படக்குழு தெரிவித்துள்ளது. சபரி ஒளிப்பதிவும், எம்.எஸ். காமேஷ் இசையும், மணிகுமரன் சங்கரா படத்தொகுப்பும், முஜிபூர் ரஹ்மான் கலையும், வீர் விஜய் சண்டை பயிற்சியாளராகவும் பணியாற்ற கே.ஹெச். ஜெகதீஸ் தயாரிப்பு மேற்பார்வையாளராக பணியாற்றுகிறார்.

Related Stories: