மா லாடு (பாசிப்பருப்பு லட்டு)

தேவையான பொருட்கள் :

பாசிப்பருப்பு- 2  கப்,

சர்க்கரை - 3 கப்,

நெய்- 200 கிராம்

முந்திரிப்பருப்பு-10,

ஏலக்காய் -4,

உலர் திராட்சை-10.

செய்முறை :

முதலில் உடைத்த பாசிப்பருப்பை பொன்னிறமாக வறுத்துப் பின் மிசினில் கொடுத்து நைஸாக அரைத்து வைத்துக்கொள்ளவும்,பின் அதே போல சர்க்கரையையும்  மிக்சியில் நைஸாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.முந்திரிப்பருப்பு,ஏலக்காய்,உலர் திராட்சையை நெய்யில் வறுத்து எடுத்து தனியாக வைத்துக்கொள்ளவும்,  மீதமுள்ள நெய் முழுவதையும் இளம் சூடான பதத்தில் காய்ச்சி வைத்துக் கொள்ளவும், இப்போது நன்றாக அரைத்து தயார் நிலையில் உள்ள பாசிப்பருப்புடன்  அரைத்த சர்க்கரையை சீராகக் கலக்கவும்.

பிறகு வறுத்து தயாராக உள்ள முந்திரிப் பருப்பு, உலர்திராட்சை, ஏலக்காய் போன்றவற்றை பருப்பு பிளஸ் சர்க்கரைக் கலவையுடன் கலக்கவும். முடிவாக இளம்  சூடான நெய் கலந்த பின் கட்டி தட்டாதவாறு நன்றாக அழுத்திப் பிசையவும். சர்க்கரையுடன் நெய் சேர்ப்பதால் முதலில் இலகும் கலவை சிறிது நேரம் கழித்து  இறுகத் தொடங்கும். சரியான பதம் வந்த பிறகு கைகளால் சிறு சிறு உருண்டைகளாக பிடித்தால் பாசிப்பருப்பு லட்டு தயார்.

Related Stories: