மீனவர்களின் வாழ்க்கை கதை

சென்னை: நவம்பர் மாதம் இறுதியில் திரைக்கு வர இருக்கும் படம் ‘வாத்தியார்குப்பம்’. இந்த படத்தின் இயக்குனர் ரஹ்மத் சாகிப்புடன் மீண்டும் இணைந்து ரஹ்மத் கிரியேஷன் தயாரிக்க உள்ள அடுத்த படம் ‘கடற்கரைப் பட்டினம்’. மீனவர்களின் வாழ்வியல் பிரச்சனைகளை மைய கருவாக வைத்து உருவாகும் படம் இது.

இத்திரைப்படத்தில் கதாநாயகனாக விச்சு கதாநாயகியாக ரஸ்மிதா ஹிவாரி மற்றும் பலர் நடிக்கிறார்கள். இயக்குனர் ரஹ்மத் சாகிப் இந்த படத்தின் கதை, திரைக்கதை,வசனங்களை எழுதி இயக்கவுள்ளார். ஜாஸ் ஜே.பி. இசையமைக்க உள்ளார். நந்தா லெட்சுமண் மற்றும் ஏஆர். ராஜேஷ் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். நிக்க்ஷன் ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார். 2025ம் ஆண்டு கோடைவிடுமுறைக்கு இப்படம் வெளிவர உள்ளது.

Related Stories: