திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹாரம் : லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. முன்னதாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த 8ம் தேதி கந்தசஷ்டி திருவிழா தொடங்கியது. கந்தசஷ்டிவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் விழாவை காண கோயில் கடற்கரையில் ஏராளமான பக்தர்கள் கூடியுள்ளனர். அறுபடை வீடுகளில் 2வது படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 8ம் தேதி துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் திருச்செந்தூர் கடற்கரையில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதையொட்டி அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது.

Advertising
Advertising

காலை 9 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம், பிற்பகல் 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடந்தது. மாலை 4.30 மணிக்கு மேல் கடற்கரையில் சூரனை சுவாமி ஜெயந்திநாதர் சூரனை வதம் செய்தார். தொடர்ந்து சந்தோஷ மண்டபத்தில் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை நடக்கிறது. அதன்பின்னர் சுவாமியும், அம்பாளும் புஷ்ப சப்பரத்தில் எழுந்தருளி கிரிவீதி வலம் வந்து 108 மகாதேவர் சன்னதி முன்பு சாயா அபிஷேகம் நடைபெறும். 7ம் திருநாளான நாளை (14ம் தேதி) அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூபம், உதயமார்த்தாண்ட அபிசேகம் மற்றும் மற்ற கால பூஜைகள் நடக்கின்றன. அதிகாலை 5 மணிக்கு தெய்வானை அம்பாள் தவசுக் காட்சிக்கு எழுந்தருளுகிறார்.

மதியம் 6 மணிக்கு சுவாமிக்கும், அம்பாளுக்கும் மாலை மாற்றும் நிகழ்ச்சி தெற்கு ரதவீதி  மேலரதவீதி சந்திப்பில் நடக்கிறது. பின்னர் இரவு சுவாமிக்கும், தெய்வானை அம்பாளுக்கும் முருகன் கோயிலில் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. சூரசம்ஹாரத்தை காண தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும், இலங்கை, மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலில் குவிந்தவண்ணம் உள்ளனர். சூரசம்ஹாரத்தையொட்டி அரசுப் போக்குவரத்து கழகம் சார்பில் 185 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதேபோல், திருத்தணியை தவிர்த்து பழநி, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட முருகன் கோயில்களிலும் கந்த சஷ்டி திருவிழாவின் தொடர்ச்சியாக சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது.

Related Stories: