திருவாரூர் அருகே தப்பளாம்புலியூரில் பிடாரி அம்மன் கோயில் தேரோட்டம்

திருவாரூர்: திருவாரூர் அருகே தப்பளாம்புலியூரில் பிடாரி அம்மன் கோயில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. திருவாரூர் அருகே தப்பளாம்புலியூர் கிராமத்தில் பிடாரி குளுந்தாளம்மன் கோயில் இருந்து வருகிறது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்துவரும் இக்கோயிலில் ஆவணி மாத தேரோட்ட விழா நேற்று காலை நடைபெற்றது. தேர் 4 வீதிகளையும் சுற்றி வந்து மீண்டும் நிலையடியில் நிறுத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் ராஜேந்திரன் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

Advertising
Advertising

Related Stories: