ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன்: சொல்கிறார் மணிகண்டன்

சென்னை: மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ், எம்ஆர்பி எண்டர்டெயின்மெண்ட்ஸ் சார்பில் நசரேத் பசிலியான், மகேஷ் ராஜ் பசிலியான், யுவராஜ் கணேசன் இணைந்து தயாரித்துள்ள படம், ‘லவ்வர்’. ஏற்கனவே இந்நிறுவனம் தயாரித்த ‘குட்நைட்’ படத்தில் நடித்த மணிகண்டன், தற்போது இப்படத்தில் மீண்டும் ஹீரோவாக நடித்துள்ளார். ‘மாடர்ன் லவ்’ ஸ்ரீகவுரி பிரியா ஹீரோயினாக நடித்துள்ளார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய, ஷான் ரோல்டன் இசையில் மோகன் ராஜன் பாடல்கள் எழுதியுள்ளார். யூடியூப்பில் வெளியான ‘லிவ்இன்’ என்ற முதல் வெப்சீரிஸை இயக்கியிருந்த பிரபுராம் வியாஸ், ‘லவ்வர்’ படத்தை எழுதி இயக்கியுள்ளார். சென்னை மற்றும் கோவா அருகிலுள்ள கோகர்ணாவில் படப்பிடிப்பு நடந்துள்ளது. வரும் 9ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தை சக்தி பிலிம் பேக்டரி சார்பில் சக்திவேலன் வெளியிடுகிறார். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் மணிகண்டன் பேசியதாவது:

உலகின் ஆதி உணர்வு காதல். ஆனால், எப்போதும் ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையிலான உறவு சிக்கல் மிகுந்ததாகவே இருந்து வருகிறது. இக்கால இளைஞர்களின் உலகையும், ரிலேஷன்ஷிப்பில் அவர்கள் சந்திக்கும் பிரச்னைகள், அவர்களின் காதல் உள்பட எல்லாவற்றையும் பற்றி விரிவாகப் பேசும் ரொமான்ஸ் டிராமாவாக இப்படம் உருவாகியுள்ளது. அனைவரையும் கவரும் வகையில், இப்படத்தை ஒரு கமர்ஷியல் கொண்டாட்டமாக பிரபுராம் வியாஸ் எழுதி இயக்கியுள்ளார். ஹீரோயின் ஸ்ரீகவுரி பிரியா கொடுத்த ஒத்துழைப்பை மறக்க முடியாது. இப்படத்தின் ஷூட்டிங் நடந்தபோது அவர் இருந்த நிலை மிகவும் பரிதாபத்துக்குரியது. ஆனால், தனது கஷ்டத்தை எல்லாம் பொருட்படுத்தாமல் நடித்துக் கொடுத்த அவரது அர்ப்பணிப்பு உணர்வை கண்டிப்பாக நான் பாராட்டியாக வேண்டும். ஏற்கனவே நான் நடித்து வெளியான ‘ஜெய்பீம்’, ‘குட்நைட்’ ஆகிய படங்களுக்கு இசை அமைத்திருந்த ஷான் ரோல்டன், இப்போது ‘லவ்வர்’ படத்துக்கு இசை அமைத்துள்ளார். அவரது 10 பாடல்களும் மிகவும் வித்தியாசமாகவும், அழுத்தமாகவும் இருக்கும். பின்னணி இசையில் அவர் இப்படத்தின் கதையையும், காட்சிகளையும் மேலும் மெருகூட்டியிருக்கிறார். நான் எப்போதும் சொல்வது போல், கண்டிப்பாக இப்படம் ரசிகர்களை ஏமாற்றது என்ற உத்தரவாதத்தை அளிக்கிறேன்.

The post ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன்: சொல்கிறார் மணிகண்டன் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: