விழாவில் நடிகை கங்கனா ரனாவத் பேசியதாவது: என்னுடைய வாழ்க்கையில் நான் இதுவரை யாரிடமும் எந்த கதாபாத்திரத்தையும் நடிப்பதற்காக விரும்பி கேட்டதில்லை, இயக்குநரிடம் சந்திரமுகியாக நடிக்க நான் பொருத்தமாக இருப்பேனா? என கேட்டேன். சிறிது நேர யோசிப்பிற்குப் பிறகு அவர் சரி என்று ஒப்புக்கொண்டார். படப்பிடிப்பு தலத்தில் சந்திரமுகி எப்படி நடப்பார் என்பது குறித்தும் அவர் துல்லியமாக நடித்துக் காட்டினார். அதைப் பார்த்து நடந்தேன்.
நடிகர் ராகவா லாரன்ஸ் எப்போதும் கனிவாக நடந்து கொள்ளக் கூடியவர் படப்பிடிப்பு தளத்தில் முதன்முறையாக சந்தித்தபோது கங்கனா மேடம் என்றார். அதன் பிறகு இரண்டாவது நாள் கங்கனா என்றார். மூன்றாவது நாள் ஹாய் கங்கு என அழைத்தார். நான் வடிவேலுவின் மிகப்பெரிய ரசிகை. அவருடன் இணைந்து பணியாற்றியது மறக்க முடியாது. இந்தப் படத்தில் நான் மூன்று பாடலுக்கு நடனமாடியுள்ளேன். இதுவும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது, இவ்வாறு அவர் பேசினார்.
The post நான் வடிவேலுவின் தீவிர ரசிகை: கங்கனா ரனாவத் பேச்சு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.