ஆர்.கே.பேட்டை, ஏப்.11: ஆர்.கே.பேட்டை அருகே தாமனேரி கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளியில் இடிந்து விழுந்துள்ள சுற்றுச்சுவரை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆர்.கே.பேட்டை ஒன்றியம், தாமனேரி கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள அரசு தொடக்கப்பள்ளி மற்றும் அங்கன்வாடி மையத்தில் 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இவ்வாறு, அக்கிராமத்தில் செயல்பட்டு வந்த அரசு தொடக்கப்பள்ளி மற்றும் அங்கன்வாடி மையத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்துள்ளது. மேலும், இப்பள்ளியின் அருகே செடி கொடிகள் அதிகளவில் வளர்ந்துள்ளதால், விஷ ஜந்துக்கள் மற்றும் விஷப்பூச்சுகள் இடிந்து விழுந்துள்ள சுற்றுச்சுவர் வழியாக உள்ளே வரும் அபாயம் உள்ளது. எனவே, மாணவ – மாணவிகள் மற்றும் அங்கன்வாடி குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு இடிந்து விழுந்துள்ள சுற்றுச்சுரை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள், அரசு கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post இடிந்து விழுந்த பள்ளி சுற்றுச்சுவர்: சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.