மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு

 

திருவொற்றியூர், ஏப்.11: சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 2025-26ம் கல்வி ஆண்டிற்கான மாணவ, மாணவிகள் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மணலி மண்டலம் சார்பில், சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவ, மாணவிகளை சேர்க்க வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி எர்ணாவூர் சுனாமி குடியிருப்பு பகுதிகளில், மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு தலைமையில் நடைபெற்றது.

மண்டல உதவி ஆணையர் விஜயபாபு முன்னிலை வகித்தார். மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் ஆகியோர் மாநகராட்சி பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் கல்வி மேம்பாட்டிற்காக தமிழக அரசு செய்துள்ள காலை சிற்றுண்டி, செய்தித்தாள் வாசிப்பு பயிற்சி, விளையாட்டு பயிற்சி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை எடுத்துரைத்து, பொதுமக்கள் தங்கள் பிள்ளைகளை மாநகராட்சி பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்களை வழங்கினர். தொடர்ந்து, மாணவ, மாணவிகள் பள்ளியில் பயிற்சி பெற்ற தனிதிறன்களை கலைநிகழ்ச்சியாக செய்து காட்டினர். அவர்களுக்கு தி.மு.தனியரசு பரிசுகள் வழங்கினார்.

The post மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Related Stories: