ஊத்துக்கோட்டை, ஏப். 3: ஊத்துக்கோட்டை அருகே சீத்தஞ்சேரி கிராமத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். இங்கு சீத்தஞ்சேரி முதல் வெங்கல் வரை காப்புகாடு உள்ளது. இதை செங்குன்றம் சீத்தஞ்சேரி வனத்துறையினர் பராமரித்து வருகிறார்கள். இந்நிலையில் காப்புக்காடு அருகில் ஊத்துக்கோட்டை-திருவள்ளூர் சாலையில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவுள்ள ஏரி உள்ளது. இந்த ஏரியில் உள்ள மரங்கள் நேற்று மாலை 6 மணியளவில் திடீரென தீப்பிடித்து எரிந்தன.
இந்த தீ வேகமாக பரவியதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் பென்னாலூர்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.இதையறிந்த தனிப்பிரிவு காவலர் செந்தில் சம்பவயிடத்திற்கு வந்தார். அவருடன் வனத்துறையினர் இணைந்து தீயை அணைக்க முயன்றனர், ஆனால் முடியவில்லை. பின்னர் திருவள்ளூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் அங்கு வந்து நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். மர்ம நபர்கள் சிகரெட் பிடித்து போட்டதால் இந்த தீ விபத்து ஏற்பட்டதா என்ற கோணத்தில் பென்னாலூர்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனால் சீத்தஞ்சேரி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
The post ஊத்துக்கோட்டை அருகேஏரிப்பகுதியில் திடீர் தீ appeared first on Dinakaran.