மீஞ்சூர் வடக்கு ஒன்றியத்தில் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்

 

பொன்னேரி, ஏப்.5: திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், மீஞ்சூர் வடக்கு ஒன்றிய திமுக சார்பில், பொது உறுப்பினர்கள் கூட்டம் மீஞ்சூர் வடக்கு ஒன்றிய செயலாளர் முரளிதரன் ஏற்பாட்டில், திருப்பாலைவனம் ஊராட்சி வஞ்சிவாக்கத்தில் உள்ள சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் வல்லூர் ரமேஷ்ராஜ் கலந்துகொண்டார்.

இதில், வரும் 2026ல் சட்டமன்றத் தேர்தல் வர உள்ளதால் கட்சி நிர்வாகிகள் அனைவரும் திமுக ஆட்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டிற்கு செய்த நன்மைகள், சாதனைகள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு செய்த நலத்திட்ட உதவிகள் குறித்த துண்டு பிரசுரங்களாக வீடு வீடாக சென்று வழங்க வேண்டும் என கட்சி நிர்வாகிகளை ரமேஷ் ராஜ் கேட்டுக்கொண்டார்.

இந்த கூட்டத்தில், மாநில நிர்வாகிகள் அன்புவாணன், பாஸ்கர்சுந்தரம், சி.எச்.சேகர், மாவட்ட நிர்வாகிகள் பகலவன், ஜெ.மூர்த்தி, உமாமகேஸ்வரி, டாக்டர் பரிமளம் விஸ்வநாதன், பா.செ.குணசேகரன், முகமது அலவி, ஜெயசித்ரா சிவராஜ், சுப்பிரமணி, ரமேஷ், ரவி, தமிழரசன், ஒன்றிய செயலாளர்கள் பரிமளம், மணிபாலன், ஜெகதீசன், பொன்னேரி நகர செயலாளர் ரவிக்குமார், பொன்னேரி நகர இளைஞரணி அமைப்பாளர் மா.தீபன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

The post மீஞ்சூர் வடக்கு ஒன்றியத்தில் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: