திருத்தணி,ஏப்.10: திருவாலங்காடு அருகே மணவூரில் பழமையான கந்தசாமி கோயிலில் திருப்பணிகள் மேற்கொண்டு புதுப்பிக்கப்பட்டது. இதையடுத்து கோயில் கும்பாபிஷேக விழா 3 நாட்கள் நடைபெற்றது. விழாவையொட்டி கோயில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. கோயில் வளாகத்தில் யாக சாலைகள் அமைத்து நித்திய ஹோம குண்ட பூஜைகள் நடைபெற்றது.
நேற்று காலை மஹா பூர்ணாஹூதி ஹோம பூஜைகள் தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க புனித நீர் கலசங்கள் புறப்பாடு நடைபெற்று விமான கோபுரம் கலசத்திற்கு புனித நீரால் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்று அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான கிராம மக்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு பிரசானம், அன்னதானம் வழங்கப்பட்டது.
The post திருவாலங்காடு அருகே கந்தசாமி கோயில் கும்பாபிஷேக விழா appeared first on Dinakaran.