திருத்தணி, ஏப்.9: பொதட்டூர்பேட்டையில் பேரூராட்சிக்கு சொந்தமான கடைகள் ஏலம் 2வது முறையாக ரத்து செய்யப்பட்டது. பொதட்டூர்பேட்டை பேரூராட்சி சார்பில் பேருந்து நிலையத்தில் வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது. தரைத் தளத்தில் 9 கடை அறைகள் மற்றும் முதல் தளத்தில் 9 கடைகள் கட்டப்பட்டுள்ளது. அத்திமாஞ்சேரிபேட்டை சாலையில் கடை எண் 3 உள்பட 19 கடைகள் பொது ஏலம் மூலம் குத்தகை உரிமம் 4ம்தேதி கோரப்படும் என்று பேரூராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது.
இருப்பினும், இடைத்தேர்தல் பயிற்சி வகுப்பில் செயல் அலுவலர் பங்கேற்கச் சென்றதால், கடைகள் ஏலம் 8ம் தேதிக்கு (நேற்று) மாற்றப்பட்டது. ஆனால் நேற்று நடைபெற வேண்டிய கடைகள் பொது ஏலம், நிர்வாக காரணங்களுக்காக மறு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைப்பதாக பேரூராட்சி சார்பில் பேரூராட்சி அலுவலக அறிவிப்பு பலகையில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. கடைகள் பொது ஏலம் 2வது முறையாக ரத்து செய்யப்பட்டதால், கடைகளை பொது ஏலத்தில் எடுக்க ஆர்வமாக இருந்த வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
The post பொதட்டூர்பேட்டை பேரூராட்சி கடைகள் ஏலம் 2வது முறை ரத்து appeared first on Dinakaran.