திமுக இளைஞரணி சார்பில் பொங்கல் விழா விளையாட்டு போட்டி

அருப்புக்கோட்டை, ஜன.21: அருப்புக்கோட்டை அருகே ஆத்திப்பட்டியில் திமுக இளைஞரணி சார்பில் விளையாட்டு போட்டி நடைபெற்றது. அருப்புக்கோட்டை தெற்கு, வடக்கு ஒன்றிய திமுக இளைஞரணி சார்பில் திராவிட பொங்கல் விழா மற்றும் சமூக நீதிக்கான விழாவை முன்னிட்டு கோலப்போட்டிகள் ஆத்திப்பட்டியில் நடந்தது. தெற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அழகுஇராமானுஜம், வடக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தங்கமணி ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த போட்டியில் ஆத்திபட்டி பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பல வண்ணக் கோலங்கள் வரைந்தனர்.

இதில் பங்கேற்ற சில பெண்கள் நம்மை காக்கும் 48, காலை உணவு திட்டம், புதுமைப்பெண் திட்டம், மகளிர் உரிமைத்தொகை, தாயுமானவர் திட்டம் என திமுக அரசின் திட்டங்களை விளக்கி கோலம் வரைந்து கவனத்தை ஈர்த்தனர். இந்த கோலப்போட்டியில் பங்கேற்ற பெண்கள் அனைவருக்கும் விருதுநகர் தெற்கு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் கேகேஎஸ்எஸ்ஆர்ஆர் ரமேஷ் பரிசுகள் வழங்கினார். நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய சேர்மன் சுப்பாராஜ், திமுக ஒன்றிய செயலாளர்கள் பாலகணேசன், பொன்ராஜ் உட்பட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: