விளைச்சல் அதிகரிப்பால் தக்காளி விலை வீழ்ச்சி

ஓசூர், ஜன.29: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், பாகலூர், பேரிகை, சூளகிரி, உத்தனப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 4 ஆயிரம் ஏக்கருக்கு மேல், விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்துள்ளனர். இப்பகுதிகளில் விளையும் தக்காளி, சென்னை கோயம்பேடு, ஈரோடு, கோவை, கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும், வெளி மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்தாண்டு விளைச்சல் பாதிக்கப்பட்டதால் தக்காளி விலை கிலோ ரூ.100 வரை விற்பனையானது. இதனால் ஓசூர் பகுதி விவசாயிகள் இந்தாண்டு சுமார் 4 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்துள்ளனர். இதற்கிடையில், தக்காளி விளைச்சல் அதிகரித்து மார்க்கெட்டிற்கு வரத்து கூடி உள்ளது. இதனால் விவசாயிகளிடம், வியாபாரிகள் ரூ.8 முதல் ரூ.10க்கு கொள்முதல் செய்து சந்தைகளில் ரூ.15க்கு விற்பனை செய்கின்றனர். உழவர் சந்தையிலும் ரூ.15க்கு விற்பனை செய்யப்படுகிறது. விலை குறைவால் கவலையடைந்த விவசாயிகள் தக்காளியை பறிக்காமல், தோட்டங்களில் அப்படியே விட்டுள்ளனர். மேலும் சில விவசாயிகள் சாலையோரங்களில் கொட்டி விட்டு செல்கின்றனர்.

Related Stories: