பள்ளி ஆசிரியையிடம் 2 பவுன் செயின் பறிப்பு

கெங்கவல்லி, ஜன. 29: ஆத்தூரில் தனியார் பள்ளி ஆசிரியையிடம் 2 பவுன் தங்க செயினை பறித்து சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே 24 வார்டு காந்திநகர் 60 அடி ரோடு பகுதியில் வசிக்கும் சதீஷ்குமார் மனைவி திவ்யா(43). இவர் தனியார் பள்ளியில் ஹிந்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் வீட்டின் அருகேயுள்ள டியூஷன் சென்டரில் வாரத்தில் திங்கள், புதன்கிழமை இரண்டு நாட்கள் மாணவர்களுக்கு டியூஷன் எடுத்து வருகிறார்.

நேற்று இரவு 9 மணி அளவில், டியூசன் சென்டரில் இருந்து வீட்டுக்கு செல்வதற்காக, சென்று கொண்டிருந்த போது, டூவீலர் வந்த இருவர் திவ்யா கழுத்தில் இருந்த 2 பவுன் தங்க செயினை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர். அப்போது, ஆசிரியை கூச்சலிட்டதால் அருகில் இருந்தவர்கள் வெளியே வருவதற்குள், மர்ம நபர்கள் இருவரும் அங்கிருந்து டூவீலரில் தப்பியோடி விட்டனர். இது குறித்து தகவல் அறிந்த டவுன் போலீஸ் எஸ்ஐ சிவசக்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிரமாக விசாரணை நடத்தினர். பின்னர், அங்கிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து, நகை பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். செயின் பறிப்பின்போது ஆசிரியர் திவ்யாவிற்கு காயம் ஏற்பட்டதால், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

Related Stories: