தர்மபுரி, ஜன.29: சமவேலைக்கு சமஊதியம் வழங்கக் கோரி பதிவு மூப்பு இடைநிலை ஆசிரியர்கள் நேற்று தர்மபுரி கலெக்டர் அலுவலகம் அருகே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் சங்கம் சார்பில், சென்னை உள்பட தமிழகம் முழுவதும் தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தர்மபுரி மாவட்ட இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்கம் சார்பில், நேற்று கலெக்டர் அலுவலகம் அருகே காத்திருப்பு போராட்டம் நடந்தது. மாவட்ட பொறுப்பாளரும், மகளிரணி ஒருங்கிணைப்பாளருமான சிவமலர் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் தர்மபுரி வட்டார செயலாளர் கேசவன், மாவட்ட துணை தலைவர் சத்தியமூர்த்தி, வட்டார பொறுப்பாளர்கள் தனலெட்சுமி, சுரேஷ், ஆறுமுகம் ஜெயபால், காமராஜ், பிரபு, அறிவழகன், தர்மபுரி வட்டார பொருளாளர் உமாமகேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்று, சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
பதிவு மூப்பு இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்
- பதிவுசெய்யப்பட்ட மூத்தோர்
- ஆசிரியர்கள்
- தர்மபுரி
- தர்மபுரி கலெக்டர்
- பதிவுசெய்யப்பட்ட மூத்த இடைநிலை ஆசிரியர்கள் சங்கம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை…
