விபத்தில் எஸ்எஸ்ஐ படுகாயம்

சின்னமனூர், ஜன. 28: உத்தமபாளையம் கோட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் அபுதாஹிர் (58). இவர் நெடுஞ்சாலை ரோந்து பிரிவில் (2) சிறப்பு சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 21ம் தேதி அபுதாஹிர் தனது டூவீலரில் தேனி ஆயுதப்படை மைதானத்திற்கு சென்றார். சீலையம்பட்டி அருகே செங்குளம் பகுதியில் பகுதியில் வந்த போது, சின்னமனூரை சேர்ந்த நாகேந்திரன் என்பவர் ஓட்டி வந்த ஆட்டோ மீது டூவீலர் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் தூக்கி வீசப்பட்ட எஸ்எஸ்ஐ அபுதாஹிர் படுகாயமடைந்தார். தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், பின் மேல் சிகிச்சைக்காக மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து சின்னமனூர் காவல்நிலையத்தில் அபுதாஹிர் நேற்று முன் தினம் புகார் அளித்தார். போலீசார் ஆட்டோ டிரைவர் நாகேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Related Stories: