பழனிசெட்டிபட்டியில் மதிமுக பொதுக் கூட்டம்

தேனி, ஜன. 28: தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் மதிமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கநாள் பொதுக்கூட்டம் நடந்தது. தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் தேனி மாவட்ட மதிமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட துணை செயலாளர் பொன்முடி தலைமை வகித்தார். மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பார்த்தசாரதி வரவேற்று பேசினார். மாவட்ட பொருளாளர் பரசுராமன், ஒன்றிய செயலாளர் போஸ் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் தேனி மாவட்ட செயலாளர் விஎஸ்கே ராமகிருஷ்ணன், மாநில துணைத் தலைவர் காதர்மைதீன், மாநில தேர்தல் பணி துணை செயலாளர் விஜயகுமார்பாக்கியம் சிறப்புரையாற்றினர். இதில்,மாவட்ட துணைத் தலைவர் பாஸ்கரன், மாவட்ட துணை செயலாளர்கள் பெரியசாமி, ராமராஜ், வெங்கிட்டம்மாள், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயச்சந்திரன், அம்சராஜன் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

 

 

Related Stories: