சேந்தமங்கலம், ஜன.29: தமிழக பள்ளிக் கல்வித்துறையால் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள், மதுரை மாவட்டத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் பங்கேற்றன. டேக்வாண்டோ போட்டியில், எருமப்பட்டி ஒன்றியம், முத்துகாப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் பிளஸ் 2 மாணவர் ராமன் மாநில அளவில் மூன்றாமிடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். வெற்றி பெற்ற மாணவர் மற்றும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் விமல்ராஜ் ஆகியோருக்கு பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா நடந்தது. தலைமை ஆசிரியர் இளங்கோ தலைமையில், மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் கலைவாணன், ராஜா ஆகியோர் கலந்து கொண்டு பாராட்டி பரிசு வழங்கினர். நிகழ்ச்சியில், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் செல்வராஜ், பள்ளி மேலாண்மைக் குழு வனிதா, முன்னாள் மாணவர்கள் வரதராஜ், இளங்கோ மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
டேக்வாண்டோ போட்டியில் அரசு பள்ளி மாணவர் வெற்றி
- Senthamangalam
- மதுரை மாவட்டம்
- தமிழ்நாடு பள்ளி கல்வித் துறை
- எருமபட்டி ஒன்றியம்
- முத்துகாபட்டி அரசு மேல்நிலைப் பள்ளி
