திருச்செங்கோடு, ஜன.29: கடந்த 50 ஆண்டுகளுக்கு பின், திருச்செங்கோடு பெரிய ஓங்காளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருச்செங்கோடு, பெரிய ஓங்காளி அம்மன், முனியப்ப சுவாமி கோயில் பரிவார சக்தி முனியப்ப சாமிகள் திருப்பணிகள் செய்யப்பட்டு மகா கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. 50 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கும்பாபிஷேக விழா நடைபெற்றது. காலையில் கலசங்கள் கோயிலை வலம் வந்தது. தொடர்ந்து சினம் தீர்த்த விநாயகர், மகாமுனீஸ்வர சுவாமிகள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஐம்பது ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் கும்பாபிஷேகம் என்பதால், பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் மீது கும்பாபிஷே புனித நீர் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. நாளை முதல் 48 நாட்கள் மண்டலாபிஷேக பூஜைகள் தொடர்ந்து நடைபெற உள்ளது. கும்பாபிஷேக விழாவில், திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு, மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ்பாபு, பரந்தாமன் மற்றும் விழா ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் தியாகராஜன், பாலுசாமி, மாதவ கிருஷ்ணன், பிரபாகரன், முருகேசன், தங்கவேல், ராமசாமி, பாலமுரளி, கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
