ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

நாமக்கல், ஜன.29: நாமக்கல்லில், தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் உறுதியளிப்பு ஓய்வூதிய திட்டத்தை மறுபரிசீலனை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்டக்கிளை தலைவர் அன்புக்குமார் தலைமை வகித்தார். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தி, தற்போது அறிவித்த உறுதியளிப்பு ஓய்வூதிய திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும். 70 வயது நிறைவடைந்த ஓய்வூதியர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் 10 சதவீதம் வழங்க வேண்டும். தொகுப்பூதியத்தில் பணி புரிந்த ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்க வேண்டும். மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள குளறுபடிகளை களைந்து, உண்மையான காசில்லா மருத்துவத்தை உறுதிபடுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தப்பட்டது. மாவட்ட பொருளாளர் பெரியசாமி, மாவட்ட செயலாளர் குப்புசாமி, மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவர் ராமசாமி உள்ளிட்டோர் பங்கேற்று, கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

Related Stories: